Pages

Saturday, June 12, 2010

மொழியினை மாற்றிக்கொள் என்று சொல்ல நீங்களெல்லாம் யாரு(டா)

நான் எதார்த்தமாக தொலைக்காட்சியில் அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் பாட்டுபாடும் நிகழ்ச்சியில் ஒரு மாணவனை நடுவராக (இவர்களையெல்லாம் நடுவர்கள் என்று சொல்லிக்கொள்ள கூச்சமாக இருக்கிறது வேறுவழி)அமர்ந்துகொண்டிருப்பவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர் சரி அப்படி அந்த மாணவன் என்னதான் தப்பு செய்துவிட்டான் என்று பார்ப்பதற்காக அந்த நிகழ்ச்சியிலேயே வைத்துப்பார்த்தேன்.அவர் பேசியதுதான் இந்த பதிவினை இடும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது.நான் இந்த வலைப்பூவில் நான் படித்து சுவைத்தவைகளை தவிர மற்றவற்றை எழுதவேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் இவர்கள் பேசியது எழுதவைத்துவிட்டது.நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட மாணவர் (18-19 வயது இருக்கும்) பாடலில் உள்ள ஒன்றிரண்டு வார்த்தைகளை ஏதோ மாற்றி பாடிவிட்டாராம் அதற்கு அந்த மாணவரை இப்படியா திட்டுவது.முதலாவதாக உள்ள நடுவர் கூறுகிறார் உங்களுக்கு நாங்களா மொழியினைக் கற்றுக்கொடுக்க முடியும் நீங்கள்தான் கற்றுக்கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறார் அட எங்கள் தாய் தமிழ் மொழியினைக் கெடுத்ததே நீங்களும்தானடா உங்கள் திரைப்படப் பாடலில்தான் எத்தனை தமிழ்மொழிக்கொலைகள்.உங்களுடைய லெட்சனம் என்னவென்று எங்களுக்கு தெரியும்.இதெயெல்லம் கூட பொறுத்துக்கொள்ளலாம் இதிலேயே மூன்றாவதாக இருந்தவர்(கேரள மாநிலத்தை சேர்ந்தவர்) கூறினாரே அதுதான் இன்னும் என் மனதில் கோபத்தை ஏற்படுத்துகிறது.அந்த மாணவரைப் பார்த்து இவர் கூறுகிறார்
உன்னால் இந்த பாட்டை சரியாக பாடமுடியவில்லை என்றால் மொழியினை மாற்றிக்கொள்,இல்லையென்றால் எங்கள் மாநிலத்துக்கு(கேரளவுக்கு) வந்துவிடு என்று கூறுகிறார் . கேவலம் ஒரு திரைப்படபாடலில் உள்ள ஒன்றிரண்டு வார்த்தைகளை தவறாக உச்சரித்து பாடியதற்கு ஒரு தமிழனைப் பார்த்து உன் மொழியினை மாற்றிக்கொள் என்று கூற யாருடா நீங்களெல்லாம் ?
கொஞ்ச காலமாக தொலைக்காட்சியில் இவர்களினுடைய அதிகாரம் எல்லை மீறிக்கொண்டு போகிறது.

16 comments:

Unknown said...

நேர்மையான கோபம் தம்பி ... நாளைய இளைய சமுதாயம் நிச்சயம் இதனை மாற்றும்,,

இரா.கதிர்வேல் said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

அன்புடன் நான் said...

உங்க ஆதங்கம் மிக நேர்மையானது...
அவுங்கயெல்லாம் ... மொழி விபச்சாரிகளாகவே எனக்கு படுகின்றார்கள்.
(காலம் கடந்து இப்போதே படித்தேன்)

இரா.கதிர்வேல் said...

நன்றி சி.கருணாகரசு

Anonymous said...

இந்த வலைப்பூவை ஜனவரியிலேயே ஆரம்பித்துவிட்டீர்களா? எனக்கு இப்போதுதான் தெரியும்.

இப்பேர்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், அதனை ஒளிபரப்பும் சானல்களுக்கும் நம்ம காசில் sms அனுப்பி அவர்களை வாழவைக்கவேண்டாம்.

நன்றி

இரா.கதிர்வேல் said...

Thank you பிரபு sir

Praveenkumar said...

தங்களது ஆதங்கம் நியாயமானதுதான்..! ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய ஆதங்கப்பட வேண்டிய தகவல்கள் இவ்வலைப்பக்கத்தில்...

பகிர்வுககு நன்றி நண்பரே..!

இரா.கதிர்வேல் said...

நன்றி பிரவின்குமார்

akil said...

அண்ணா,
உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

akil said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

akil said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

akil said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

akil said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

Anonymous said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

akil said...

அண்ணா,
உங்களது கோபத்தை அல்ல....நம் எல்லோருடைய கோபத்தையும்
பதிவு செய்துள்ளீர்கள்....நன்றி.

உங்களது வலைத்தளத்தின்
முகப்பு படமே
என்னை தங்களிடம் இழுத்து வந்தது

இரா.கதிர்வேல் said...

நன்றி akil