Pages

Sunday, September 2, 2012

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?


ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.

மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

ஆங்கிலம் பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் அறிவாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

*************************
நன்றி: தப்புத் தாளங்கள் புத்தகம், மஞ்சை. வசந்தன்..,