Pages

Sunday, September 2, 2012

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?


ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.

மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

ஆங்கிலம் பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் அறிவாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

*************************
நன்றி: தப்புத் தாளங்கள் புத்தகம், மஞ்சை. வசந்தன்..,

Tuesday, February 21, 2012

தொலைக்காட்சி தொடர்களின் தரம் கெட்ட வசனங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடர் உறவுக்கு கை கொடுப்போம் எனும் தொடர். இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் தொடரின் கதாபாத்திரங்களினுடைய வசனங்கள் பேசி முடிந்து விட்டது. இந்த தொடரை நான் பார்த்துக்கூட இதை எழுதவில்லை. மடிக்கணினியில் என்னுடைய நண்பருக்கு ஒரு கட்டுரை தயார் செய்துக்கொண்டிருக்கும் பொழுது ஒலி யினுடைய அளவு அதிகமாக இருந்ததால் கவனிக்க நேர்ந்தது.

அப்படி என்னதாங்க தம்பி பேசினாங்க, என கேட்கிறீங்களா.

இந்த தொடரில் உள்ள ஒரு கல்யாணம் ஆன ஆணிடம் , ஒரு பெண் பேசிய வசனம் தான் நான் இந்த பதிவை எழுத வேண்டிய சூழ்நிலையினைக் கொண்டு வந்து விட்டது.

ஆண் கூறுகிறார் எனக்கு கல்யாணம் ஆகி விட்டது , என்னுடைய மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன், என் மனைவியைத் தவிர வேறு பெண்ணுக்கு இடமில்லை என்று.

இதற்கு அந்த பெண் கூறுகிறாள் , கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை, நானென்ன உன் மனைவியினை விட்டுட்டு வா என்றா கூறுகிறேன், என்னையும் கல்யாணம் பண்ணி வைத்துக்கொள் என்றுதான் கூறுகிறேன். அதுவும் வசனம் பேசிய தோணியில் எந்த விதமான வெட்கமும் கிடையாது.

இந்த தொடரில் ஏற்கனவே ஒரு பெரிய கட்டுகதையையும், நடைமுறைக்கும் கொஞ்சம் கூட ஒத்து வரதா ஒரு கருத்தையும் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுதாங்க அவங்க அம்மா வந்து இப்பொழுது குழந்தையாக பிறந்திருக்குறாங்களாம் .

அடுத்த பிறவி என்பதே கிடையாது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் கூறிக்கிட்டு இருக்குறாங்க. ஒரு வேளை இவர்களைவிட இந்த தொடரினுடைய இயக்குநர் பெரிய ஆராய்ச்சியாளராக இருப்பாரோ. இருக்கலாங்க ஏன்னா இவிய்ங்களெல்லாம் ஒரு மாதிரியாத்தான் போயிக்கிட்டு இருக்கிறாய்ங்கே.

பொதுவாகவே இது போன்ற நெடுந்தொடர்கள் , சமுதாயத்தின் கூட்டுக்குடும்பம் எனும் மிகச் சிறப்பான ஒரு அமைப்பை கெடுத்து குட்டி சுவராக்கி விட்டது.

இந்த மானங்கெட்ட தொடர்களின் அடுத்த சமுதாயப் புரட்சி ஒருவனுக்கு இரண்டு மூன்று மனைவிகள் அதையும் தப்பு கிடையாது என்பது போல தொடர்களின் சூழ்நிலைக் காட்சி அமைப்புகள். வெட்கக்கேடு.

இதைவிட மானங்கெட்ட வசனங்களையெல்லாம் கொண்ட நெடுந்தொடர்கள் ஓடிக்கிட்டுதான் இருக்கு. அந்த கருமத்தையெல்லாம் ஏங்க செல்லித்தொலைக்கணும் . எழுத ஆரம்பித்தால் ஒரு வருடம் தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கலாம்.

அது மாதிரி இந்த மானங்கெட்ட இயக்குனர்களெல்லா சேர்ந்து உருவாக்கிய இன்னொரு மிகப்பெரிய கருத்துருவாக்கம், பணம் உள்ளவனும், அதிகாரம் படைத்தவனும் தான் இந்த உலகில் வாழலாம் என்பது. மற்றவர்களெல்லாம் இவனுங்களுக்கு அடிமை வேலை செய்யத்தான் .

உண்மையாகவே

இது போன்ற வசனங்களோ, கருத்துக்களோ திரைப்படத்தில் மட்டுமில்லை எங்கேயிருந்தாலும் அதை நாம் வெறுத்து ஒதுக்கி , எதிர்ப்பு காட்ட வேண்டியது நமது தார்மீக கடமை.